உள்ளூர் செய்திகள்

அரசு நிலத்தில் பள்ளி: மக்கள் கோரிக்கை

தங்கவயல்: தங்கவயலை சுற்றி அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் உள்ளது. இதை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதில் கேசம்பள்ளியில் சர்வே எண் 146ல் 7 ஏக்கர் நிலமும், சர்வே எண் 121ல் 1.10 ஏக்கர் நிலமும் அரசுக்கு சொந்தமானது.இந்நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இது தொடர்பாக கோலார் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா, தங்கவயல் தாசில்தார் நாக வேணி கவனத்திற்கும் சென்றுள்ளது. அவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.மஜ்ரா குட்டஹள்ளியில் பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர். அங்கு அரசு காலி நிலம் இருந்தால், பள்ளிக்கூடம் கட்டப்படும் என்று அவர்களின் கோரிக்கைக்கு அரசு தரப்பில் பதில் அளித்துள்ளனர்.இந்நிலையில், மஜ்ரா குட்டஹள்ளியில் சர்வே எண் 5ல் 4 ஏக்கர் நிலம் அரசு நிலமாக உள்ளதென தகவல் உரிமை ஆர்வலர் சோமசுந்தர ரெட்டி தகவல் பெற்றுள்ளார். இதன்படி, அரசு பள்ளியை இங்கு ஏற்படுத்த வேண்டும். அதிகாரி கவனம் செலுத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்