தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப திறன்களை வளர்க்கணும்
கோவை: கிணத்துக்கடவு, ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில், டெஸ்ஸால்வ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி வீரப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, 494 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.அவர் பேசுகையில், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்றாற்போல் மாணவர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். வருங்கால இளைஞர்களுக்கும் தங்களது அனுபவங்களை பயிற்றுவித்து இளைஞர்களை மேம்படுத்த வேண்டும் என்றார்.கல்லுாரியின் முதல்வர் சுதா, கல்லுாரியில் கல்வி, கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினார். கல்லுாரியின் தலைவர் மோகன்ராம், இயக்குனர் ராஜாராம், துணைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.