மாணவர்களுக்கு தன்னம்பிக்கை சிறப்புரை
கோவை: நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின், பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில், தகுதியான தலைமைத்துவத்திற்கான வெளிச்சம் மிகுந்த பாதை' என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர் அமெரிக்கா வங்கியின் உற்பத்தி பிரிவு மேலாளர் தீபா பேசுகையில், நாம் எந்த செயலையும் முன்தயாரிப்புடன் செய்தால், எளிதாக முடிக்க முடியும். எந்த பணியாக இருந்தாலும், அதை மகிழ்ச்சியுடனும் உற்சாகமாகவும் செய்ய பழகிக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியானது நம்மிடம் இருந்து தான் தொடங்கும் என்பதை உணர்ந்துக் கொள்ள வேண்டும் என்றார்.பெண்கள் மேம்பாட்டு மையத் தலைவி கவிதா, செயலர் ரேகா, பொருளாளர் சைலஜா, மாணவத் தலைவி ஸ்ரீநிதி, மாணவச் செயலர் பிரியதர்ஷினி மற்றும் மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.