உள்ளூர் செய்திகள்

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

கீழக்கரை: கீழக்கரை அருகே புல்லந்தை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடந்தது.மாயாகுளம் ஊராட்சி தலைவர் சரஸ்வதி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் முனீஸ்வரி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் செந்தில் நாதன் வரவேற்றார். கல்வி வளர்ச்சி நாள், கலை திருவிழாவில் குறுவள மையம் அளவில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் குழந்தைகள் தின விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் முதல் பருவத்தில் கல்வியில் முதலிடம் பிடித்த மாணவர்கள், விடுப்பு எடுக்காத மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.பரிசுகளை வியட்நாம் நாட்டில் கணிதப் பேராசிரியராக பணியாற்றும் பிரபு நன்கொடையாக வழங்கினார். மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்