உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு விரைவில் ஏ.ஐ., குறித்த பாடத்திட்டம்

பெங்களூரு: மாணவர்களுக்கு விரைவில் ஏ.ஐ., குறித்த பாடம் உட்பட வாழ்வியல் சார்ந்த பல்வேறு பாடங்கள் கற்பிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில், கர்நாடக உயர் கல்வித்துறை சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் சுதாகர் கலந்து கொண்டார்.நிகழ்ச்சியில், வாத்வானி பவுண்டேஷன், எஸ்.ஜி.பி.எஸ்., உன்னதி பவுண்டேஷன், இன்போசிஸ் ஸ்பிரிங் போர்டு, பிரிட்டிஷ் கவுன்சில், டொயோட்டா கிர்லோஸ்கர் ஆகிய தனியார் நிறுவனங்களுடன் கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.இந்த ஒப்பந்தங்கள் வாயிலாக மாணவர்களுக்கு ஆங்கிலம், டிஜிட்டல் விழிப்புணர்வு, சைபர் பாதுகாப்பு, ஏ.ஐ., தொழில்நுட்பம், வேலைவாய்ப்புகான திறமைகள், வாழ்வியல் சார்ந்த பாடங்கள் உள்ளிட்டவை கற்பிக்கப்பட உள்ளன.படித்து முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்குவதற்கு இந்த நிறுவனங்கள் உதவி புரிய உள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் தங்களது திட்டங்களால் மாணவர்களின் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்தை விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்