இந்திய மருத்துவர்கள் சங்க கருத்தரங்கம்
புதுச்சேரி : இந்திய மருத்துவ சங்கம் புதுச்சேரி கிளை, மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனை சார்பில், தொடர் மருத்துவ கருத்தரங்கம் ஆனந்தா இன் ஓட்டலில் நடந்தது.சங்க செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். தலைவர் சுதாகர் வரவேற்றார். கருத்தரங்கில் மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனை சிறுநீரகவியல் துறை இயக்குநர் மணிகண்டன் பேசியதாவது:சிறுநீரக புற்றுநோய் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. வாழ்க்கை மாற்றம், புகைப்பழக்கம் உள்பட காரணத்தால் சிறுநீரக புற்றுநோய் அதிகரிக்கிறது. ஆனால் போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். கடைசி நேரத்தில் தான் பலருக்கும் சிறுநீரக புற்றுநோய் தெரிய வருகிறது.சிறுநீரக புற்றுநோய்க்கு தற்போது நவீன ரோபோட்டிக் சிகிச்சை வந்துள்ளன. இந்த சிகிச்சையில் ரத்தபோக்கும் குறைவாக இருக்கும். அறுவை சிகிச்சையும் துல்லியமாக நடக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து நடந்த சிறப்பு அமர்வில் மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனையின் கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் கார்த்திக் மதிவாணன், இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ரிச்சர்டு சல்தானா ஆகியோர் கலந்துரையாடி விளக்கம் அளித்தனர்.புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த டாக்டர்கள் கலந்து கொண்டனர்.