ஆர் என்.ஆக்ஸ்போர்ட் மாணவர்கள் ஐ.ஐ.டி.,மாணவர்களுடன் கலந்துரையாடல்
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, பாண்டமங்கலம் ஆர்.என். ஆக்ஸ்போர்ட் பப்ளிக் பள்ளி மாணவர்களுடன், சென்னை ஐ.ஐ.டி., மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.ஆறாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும், ஜே.இ.இ., நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி மாணவர்களுடன், சென்னை ஐ.ஐ.டி., மாணவர்கள் பிரசாந்திகா, அருண் கிருஷ்ணா, ஆன்டோசன், பிரசன்னா ஆகியோர் கலந்துரையாடினர். மேலும் தேர்வுக்கு தயாராவது குறித்தும், மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு குறித்தும் சென்னை ஐ,ஐ,டி., மாணவர்கள் பேசினர். இந்நிகழ்ச்சியின் போது பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு, சென்னை ஐ.ஐ.டி., மாணவர்கள் பதில் அளித்தனர்.ஆர்.என். ஆக்ஸ் போர்ட் கல்வி நிறுவனத்தின் தலைவர் சண்முகம், தாளாளர் சக்திவேல், செயலாளர் ராஜா, இயக்குனர்கள் அருள், சேகர், சம்பூர்ணம் மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.