முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு
சென்னை: தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு ஏப்.,9 முதல் 22ம் தேதி வரையும், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்.,8ம் தேதி முதல் 24ம் தேதி வரையும் நடைபெறுகிறது.கோடை விடுமுறைதொடக்கக்கல்வி மாணவர்களுக்கு ஏப்., 23ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பிற்கு ஏப்., 25ம் தேதி முதலும் கோடை விடுமுறை தொடங்குகிறது.