உள்ளூர் செய்திகள்

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: மே/ஜூன் 2025ல் நடைபெற உள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அந்தந்த மாவத்தில் இருக்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். உரிய விண்ணப்பக் கட்டணத்துடன் மார்ச் 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தட்கல் முறையில் விண்ணப்பிப்பவர்கள் கூடுதலாக ரூ.1000 கட்டணத்துடன் மார்ச் 26ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்