உள்ளூர் செய்திகள்

சிபிஎஸ்சி தேர்வில் நாராயணா பள்ளிகள் சாதனை

சென்னை: சிபிஎஸ்சி பொதுத் தேர்வில் நாராயணா பள்ளிகள் சாதனைப் படைத்துள்ளது. பத்தாம் வகுப்பில் ஸ்பந்தனா, பார்த் பன்சால் மற்றும் திரிஷா கோஷ் ஆகியோர் 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவர்களாக வந்துள்ளனர். அதே நேரத்தில், பனிரெண்டாம் வகுப்பில் வாகின் மற்றும் ரெயான்ஷ் தேவ்நானி ஆகியோர் 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.பத்தாம் வகுப்பில் 17 மாணவர்கள் 495-க்கு மேல், மேலும் 111 மாணவர்கள் 490-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பள்ளியின் மொத்த தேர்ச்சி விகிதம் 99.6% என பதிவாகியுள்ளது. பனிரெண்டாம் வகுப்பிலும் 17 மாணவர்கள் 490-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.சரணி நாராயணா கூறுகையில், நமது மைக்ரோ-ஷெட்யூல் முறைமை மூலம் ஒவ்வொரு பாடமும் சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாணவனின் தேவைக்கு ஏற்ப வழிகாட்டல் வழங்கப்படுவதாகவும், என்லேர்ன் எனப்படும் நாராயணாவின் சொந்த இணையவழி கற்றல் தளமும், மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்யப்பட்ட உள்ளடக்கங்களை வழங்கி, விரிவான பயிற்சி மற்றும் தேர்வுகளை தருவதன் மூலம் கற்றலை மீட்டெடுக்கும் புதிய தளமாக விளங்குகிறது என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்