உள்ளூர் செய்திகள்

இஸ்ரோ தலைவர் முதல்வருடன் சந்திப்பு

சென்னை: இஸ்ரோ தலைவர் நாராயணன், நேற்று முதல்வர் ஸ்டாலினை, தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார்.இஸ்ரோ தலைவர் மற்றும் விண்வெளி துறை செயலரான நாராயணன், நேற்று தலைமைச் செயலகம் வந்தார். அவருடன் சதீஷ்தவன் விண்வெளி மையத்தின் இயக்குனர் ராஜராஜன், விண்வெளி உள்கட்டமைப்பு திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் உள்ளிட்டோரும் வந்தனர். அவர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர்.குலசேகரன்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளம், தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட உள்ள, விண்வெளி தொழில்நுட்ப பூங்கா ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.அப்போது, தலைமைச் செயலர் முருகானந்தம், தொழில்துறை செயலர் அருண் ராய், நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன், நெடுஞ்சாலைத் துறை செயலர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்