விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்யலாம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.மொத்தம் 67 வகையான போட்டிகள் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிளான போட்டிகள் ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்படுகிறது.பிரிவுகள்:பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டிகள்:தடகளம், இறகுபந்து, கால்பந்து, கிரிக்கெட், கூடைப்பந்து, ஹாக்கி, கபடி, சிலம்பம், நீச்சல், டேபிள் டென்னிஸ், வாலிபால், ஹேண்ட்பால், கேரம், செஸ், கோ-கோ, பீச் வாலிபால், டென்னிஸ், வெயிட் லிப்டிங், ஜூடோ, பாக்சிங், ரோடு சைக்கிலிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஸ்குவாஷ், ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன. பதிவு செய்யும் முறை: போட்டிகளில் விருப்பம் உள்ளவர்கள் https://cmtrophy.sdat.in/cmtrophy/registration-form எனும் இணையபக்கம் வாயிலாக முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். முன்பதிவு செய்யாமல், நேரடியாக போட்டிகளில் பங்குபெற அனுமதி இல்லை. மொத்த பரிசு தொகை: ரூ.37 கோடி பதிவு செய்ய கடைசி நாள்: ஆகஸ்ட் 16விபரங்களுக்கு:தொலைபேசி: 9514000777இணையதளம்: cmtrophy.sdat.in / sdat.tn.gov.in