கல்வி உதவித்தொகைக்கு இன்று முதல் விண்ணப்பம்
சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.ஆதிதிராவிடர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக, போஸ்ட் மெட்ரிக், ப்ரிமெட்ரிக் என, பல்வேறு கல்வி உதவித் தொகை திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.அந்த வகையில், நடப்பாண்டிற்கான கல்வி உதவித் தொகை பெற, இன்று முதல் மாணவர்கள், இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.ஏற்கனவே, உதவித்தொகை பெற்று வரும் மாணவர்கள், புதுப்பித்தால் மட்டும் போதுமானது. முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் கடந்த ஆண்டு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், உரிய ஆவணத்துடன் https://umis.tn.gov.in/ என்ற இணைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.