உள்ளூர் செய்திகள்

பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கை உயர்வு

புதுடில்லி: நாட்டின் தொழிலாளர் எண்ணிக்கை கணக்கெடுப்பின்படி, 2025 ஜூலை முதல் செப்டம்பர் வரை நடைபெற்ற 2-வது காலாண்டில் தொழிலாளர் பங்கு விகிதம் சிறிதளவு உயர்ந்து 55.1 சதவீதமாக உள்ளது. முந்தைய காலாண்டை விட இது ஓரளவு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இக்காலாண்டில் பெண் தொழிலாளர்களின் பங்கு 33.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேசமயம், வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.4 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாக குறைந்துள்ளது.கிராமப்புற வேலைவாய்ப்பு விகிதம் வேளாண் பருவ செயல்பாடுகளால் 57.7 சதவீதமாக உயர்ந்துள்ளதுடன், நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பு விகிதம் 62.0 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், கிராமப்புறங்களில் சுய தொழிலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை 62.8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்