உள்ளூர் செய்திகள்

விருது பெற்ற உடற்கல்வி ஆசிரியருக்கு பாராட்டு

மேட்டுப்பாளையம்: காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக பாலமுரளி பணியாற்றி வருகிறார். மாணவர்களுக்கு சைக்கிளிங் பயிற்சி கற்றுத் தருகிறார்.தமிழ்நாடு சைக்கிள் சங்கத்தின் அறுபதாவது ஆண்டு விழாவில், விளையாட்டு மற்றும் சைக்கிள் துறைகளில் வழங்கிய சிறந்த சேவை மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டும் வகையில், உடற்கல்வி ஆசிரியர் பாலமுரளிக்கு சிறந்த பயிற்சியாளர் விருதை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.விருது பெற்ற ஆசிரியருக்கு, காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பாராட்டு விழா நடந்தது. விழாவில் பள்ளியின் தாளாளர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் ஜெயக்கண்ணன், முதல்வர் சரஸ்வதி, ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உடற்கல்வி ஆசிரியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்