உள்ளூர் செய்திகள்

சங்கரா பல்கலையில் சைபர் பாதுகாப்பு ஆய்வகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வவதி விஸ்வ மஹா பல்கலையில், கல்வி, டிஜிட்டல் தொழில்நுட்பம், நிலைத்தன்மை மற்றும் சமூக மேம்பாடு சார்ந்த பல முக்கிய திட்டங்களை காஞ்சி மடாதி பதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் துவக்கி வைத்தார். பல்கலையில் நடந்த விழாவிற்கு துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீநிவாசு தலைமை வகித்தார். இதில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கல்வி, டிஜிட்டல் தொழில்நுட்பம், நிலைத்தன்மை மற்றும் சமூக மேம்பாடு சார்ந்த பல முக்கிய திட்டங்களை துவக்கி வைத்தார். சார்பு துணைவேந்தர் பேராசிரியர் வசந்தகுமார் மேத்தா, கல்வி மேம்பாடு மற்றும் நிலைத்த வளாக வளர்ச்சிக்கான எதிர்கால செயல்திட்டங்களை விளக்கினார். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, சென்னை சாக்ஸா - சங்கரா பழமையான அறிவு மற்றும் சமஸ்கிருத அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. காஞ்சிபுரத்தின் பழமையான கல்வி சிறப்பை மீட்டெடுக்கும் நோக்கில் 'கடிகாஸ்தானம்' திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக வேத பண்டிதர்கள் கவுரவிக்கப்பட்டனர். சங்கரா பல்கலையின் டிஜிட்டல் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் ஆர்.பி.எல்., வங்கி ஆதரவுடன் ஸ்மார்ட் டிஜிட்டல் கேம்பஸ், டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்., ஆதரவுடன் 'இமர்சிவ் டெக்னாலஜிஸ் மையம்' மற்றும் கணினி அறிவியல் துறையில் சைபர் பாதுகாப்பு ஆய்வகத்தை காஞ்சி மடாபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்