ரமண அகாடமி பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ராஜபாளையம்: ராஜபாளையம் ஸ்ரீ ரமண அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.பள்ளி ஆலோசகர் டாக்டர் கு.கணேசன் தலைமை வகித்தார். மாணவி தனுஷிகா வரவேற்றார். பள்ளித் தலைவர் கண்ணன் குத்துவிளக்கேற்றி கண்காட்சியை துவக்கினார். சிவகாசி பி.எஸ்.ஆர்., இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர்கள் கார்த்திக், தனம் மாணவர்களின் திட்ட வடிவமைப்புகளை பார்வையிட்டு தேர்ந்தெடுத்தனர்.வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தாளாளர் கிருஷ்ணவேணி பரிசளித்தார். பங்கேற்ற பெற்றோருக்கு இலவச ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம், மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. மாணவர் தயா விஷ்ணு குமரனின் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை டாக்டர் கு.கணேசன் துவக்கினார். ஏற்பாடுகளை துணை முதல்வர் இந்திரா தலைமையில் ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி நிர்வாக அலுவலர் ராமராஜ் உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்தனர்.