உள்ளூர் செய்திகள்

ரங்கபூபதி நர்சிங் கல்லுாரியில் செவிலியர்கள் உறுதிமொழியேற்பு

செஞ்சி: ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி நர்சிங் கல்லுாரியில் தீப ஒளி ஏற்றி செவிலியர்கள் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி நடந்தது.செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்க பூபதி நர்சிங் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., பயிலும் முதலாம் ஆண்டு மாணவிகள் நைட்டிங்கேர்ள் அம்மையாரின் நினைவு தினத்தை முன்னிட்டு தீபா ஒளி ஏற்றி செவிலியர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி தாளாளர் ரங்கபூபதி தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீபதி, இயக்குநர்கள் சாந்தி பூபதி, சரண்யா ஸ்ரீபதி முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் உதயசங்கரி வரவேற்றார்.தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இணை இயக்குநர் சங்கர் சண்முகம் விளக்கேற்றி தீப ஒளி ஏற்றும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து செவிலியர்கள் உறுதிமொழியேற்றனர். உதவி பேராசிரியர் கலைமதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்