உள்ளூர் செய்திகள்

மாணவ, மாணவியருக்கு மருத்துவ குழு ஆலோசனை

காஞ்சிபுரம்: அரசு பொதுத்தேர்வு எழுத உள்ள திருக்காலிமேடு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு இந்திய மருத்துவ சங்கம், காஞ்சிபுரம் கிளை பெண் மருத்துவ குழுவினர், பல்வேறு ஆலோசனை வழங்கினர்.இந்திய மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை பெண் மருத்துவர்கள் பிரிவு மற்றும் டாக்டர் அப்துல் கலாம் உதவும் கரங்கள் அமைப்பு சார்பில், திருக்காலிமேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியருக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இந்திய மருத்துவ சங்க காஞ்சிபுரம் கிளை தலைவர் தண்யகுமார், பெண் மருத்துவர்கள் பிரிவு தலைவர் சசிகலா ஆகியோர் தலைமை வகித்தனர். பெண் மருத்துவர்கள் பிரிவு செயலர் காஞ்சனா, தலைமை ஆசிரியை பிரேமகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாமல்லன் மருத்துவமனை மனநல மருத்துவர் மரியா ஆண்டனி மாணவ, மாணவியர் தங்களுடைய உடல் நலத்தையும் மனநலத்தையும் எவ்வாறு காக்க வேண்டும். எவ்வித பதற்றமும் இன்றி எவ்வாறு தேர்வு எழுத வேண்டும் என விளக்கம் அளித்தார்.பெண் மருத்துவர்கள் பிரிவு செயலர் காஞ்சனா, டாக்டர் அப்துல் கலாம் உதவும் கரங்கள் அமைப்பு நிறுவன தலைவர் தனசேகரன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்