கல்லுாரிகளுக்கு இடையே தொழில் திறன் போட்டிகள்
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப் பிரிவு வணிகவியல் துறை சார்பில் கல்லுாரிகளுக்கு இடையிலான 'புத்தொழில் துாண்டுகோல்கள்' என்ற தலைப்பில் தொழிலை தொடங்குவதற்கான ஆரம்பகட்ட உந்துதல், யோசனைகள் வளர்க்கும் திறன் போட்டிகள் நடத்தப்பட்டது.முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர், சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். டீன் அழகேசன் வரவேற்றார்.துறைத் தலைவர் மணிமுத்து துவக்க உரையாற்றினார். மதுரை கிளாரிஸ்கோ சொல்யூஷன் நிறுவனர் பிரியதர்ஷினி, இயக்குனர் விஷ்ணு பிரசாத், எஸ்.வி.எஸ்.புட்ஸ் நிர்வாக இயக்குனர் சூரத் சுந்தர சங்கர் பேசினர்.மதுரை, திண்டுக்கல், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 15 கல்லுாரிகளின் 150க்கும் மேற்பட்ட வணிகவியல் மாணவர்கள் பங்கேற்றனர்.மாணவர்கள் வணிகத் திட்டம் சார்ந்த விளக்க காட்சியை காட்சிப்படுத்தினர். ராமசாமி நாயுடு மெமோரியல் கல்லுாரி முதல் பரிசு, பாத்திமா கல்லுாரி இரண்டாம் பரிசு, வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி மூன்றாம் பரிசு பெற்றன. பேராசிரியர்கள் சரஸ்வதி, மகேஸ்வரி, கஸ்துாரி பிரியா, பானுப்பிரியா, சுகன்யா ஒருங்கிணைத்தனர். மாணவர் ஒருங்கிணைப்பாளர் குழு மாதேஷ், ஹரிணி, ஆகாஷ், இலக்கியா ஏற்பாடுகளைச் செய்தனர்.