உள்ளூர் செய்திகள்

பாண்டமங்கலம் விவேகானந்தா பள்ளியில் பட்டமளிப்பு விழா

ப.வேலூர்: பாண்டமங்கலம் விவேகானந்தா சீனியர் செகண்டரி (சி.பி.எஸ்.இ.,) பள்ளியில், யு.கே.ஜி., மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. மேலும், அனைத்து வகுப்பிலும் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவும், நீட், ஜே இ.இ., அடிப்படை பாடத்திட்டத்தில், ஆறாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவும், ரோபோடிக்ஸ் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடந்தது.நிகழ்ச்சியில், பள்ளி தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ., நெடுஞ்செழியன், பள்ளி செயலர் சுப்பிரமணியம், பொருளாளர் வேலுசாமி, தாளாளர் ராமசாமி, இயக்குனர்கள் பழனிசாமி, துரைசாமி, அருளானந்தன், வாசுதேவன் சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் சிவச்சந்திரன், ஜெயந்தி, மழலையர் பள்ளி முதல்வர் ஹில்டா டார்லிங், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக தன்னம்பிக்கை பேச்சாளர் வாசிம் அசிஸ், கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பட்டங்களை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்