உள்ளூர் செய்திகள்

எஸ்.என்.எஸ்., கல்லுாரியில் கல்லுாரி விளையாட்டு விழா

கோவை: எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரியில் கடந்த ஒரு மாத காலமாக கல்லுாரி விளையாட்டு விழா நடந்தது. கங்கா, யமுனா,சரஸ்வதி, காவேரி என நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன.நிறைவு விழாவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கூடைப்பந்து பயிற்சியாளர் பிரேம்குமார், விளையாட்டின் முக்கியத்துவத்தை விளக்கினார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கினார்.எஸ்.என்.எஸ்., கல்வி குழுமத்தின் தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல் குமார் , தொழில்நுட்ப கல்லுாரி நிர்வாக இயக்குனர் செந்துார பாண்டியன், முதல்வர் சார்லஸ், துணை முதல்வர்கள், விளையாட்டு இயக்குனர்கள் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்