உள்ளூர் செய்திகள்

பாரா மெடிக்கல் டிப்ளமோ வகுப்புகளுக்கு சேர்க்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ராஜூ இருதயம் மற்றும் தோல் சிகிச்சை மருத்துவமனையில் பாரா மெடிக்கல் டிப்ளமோ படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற்று வருகிறது.அங்கீகரிக்கப்பட்ட பாராமெடிக்கல் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு உதவிடும் வகையில் குறைந்த கட்டணத்தில் சேர்க்கை நடக்கிறது. முதன்மை மருத்துவர் இந்துபாலா கண்காணிப்பில், அட்வான்ஸ் ஹெல்த் அசிஸ்டண்ட் டிப்ளமோ - 3 ஆண்டு, ஹெல்த் அசிஸ்டண்ட் டிப்ளமோ - 2 ஆண்டு, லேப் - டெக்னிஷீயன் டிப்ளமோ - 2 ஆண்டு வகுப்புகள் இங்கு நடந்து வருகிறது.இதில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் சேர்க்கை பெறலாம். மேலும், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள ஏழை மாணவர்களுக்கு முழு கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது.என்.ஏ.பி.எச்., தரச்சான்றிதழ் பெற்ற அதிநவீன வசதிகளுடன் கூடிய ராஜூ மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் பாரா மெடிக்கல் வகுப்புகளில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு படிப்பு முடித்த உடன் 100 சதவீத வேலை வாய்ப்பும் உறுதியாகிறது. மேலும், 94440 69866 என்ற மொபைல் எண்ணில் தகவல் பெறலாம். முன்பதிவு செய்யும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மருத்துவமனை தலைவர் டாக்டர் பாபு சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்