உள்ளூர் செய்திகள்

விடுதி மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க அழைப்பு

திருவள்ளூர்: 'திருவள்ளூர் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் அறிவித்துள்ளார்.திருவள்ளூர் கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியருக்கு, 33, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு தலா 1 என, 35 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில், 4 முதல் பிளஸ் 2 வரையிலும், கல்லுாரி விடுதியில், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமா படிப்புகளில் பயில்வோர் சேரத் தகுதியுடையவர்.விடுதிகளில் சேர்வோருக்கு, மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதி அளிக்கப்படும். மாணவர்களுக்கு இலவச சீருடை, சிறப்பு வழிகாட்டிகள், வினா வங்கி நுால் வழங்கப்படும். விடுதியில் சேருவோரின் பெற்றோருக்க ஆண்டு வருவாய், 2 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.தகுதி உடையோர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில், கல்லுாரி மாணவர்கள் 15ம் தேதிக்குள்ளும், பள்ளி மாணவ, மாணவியர் 18ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்