ஜவுளி வடிவமைப்பு பயிற்சி பெற அழைப்பு
விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: எஸ்.சி., எஸ்.டி., இளைஞர்களுக்கு தாட்கோ, தனியார் நிறுவனம் இணைந்து ஜவுளி வடிவமைப்பு உற்பத்தி, துணிகளுக்கு சாயம், ஒவியம், அச்சிடுதல் போன்ற பயிற்சிகள் வழங்கவுள்ளது. இதில் பயன்பெற 18 முதல் 35 வயதிற்குள் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் பெற்றவராக இருத்தல் வேண்டும்.கோவையில் வைத்து 4 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் நபர்கள் அங்கு தங்கிப் படிப்பதற்கான விடுதி, உணவுச் செலவுகள் முழுவதையும் தாட்கோவே ஏற்கும். பயிற்சி முடிந்ததும் முன்னணி நிறுவனங்களில் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை ஆரம்ப கால ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். விருப்பமுள்ளோர் www.tahdco.com என்ற முகவரியில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம், என்றார்.