போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி முகாம் துவக்கம்
மயிலம்: ரெட்டணை ஹோலி ஏஞ்சல் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளியில் போட்டி தேர்வுகளுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி துவங்கியது.ரெட்டணை பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தாளாளர் பழனியப்பன் தலைமை தாங்கி பேசினார். பள்ளியின் முதுநிலை மேலாளர் அகிலா, துணை முதல்வர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் டாக்டர் கீர்த்திவாசன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் அருள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், 'மாணவர்கள் படிக்கின்ற காலத்தில் இருந்து நீட், ஐ.ஐ.டி., கியூட் போன்ற போட்டி தேர்வுகளுக்கு தயாராக வேண்டும்.தற்போதுள்ள சூழலில் பாடங்களை நன்றாக படித்தால் மட்டுமே இந்த தேர்வுகளில் வெற்றி பெற முடியும். எனவே பாடங்களை புரிந்து படியுங்கள்' என்றார்.நிகழ்ச்சியில், லீடு நிறுவனத்தைச் சேர்ந்த ராகேஷ் மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் மற்றும் புத்தகங்களை வழங்கி பேசினார்.நிகழ்ச்சியை ஆசிரியர்கள் விமல் ராஜ், சுஜாதா, சசிரேகா ஆகியோர் தொகுத்து வழங்கினர்கள். பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.