உதவித்தொகையுடன் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்
கோவை: தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோகெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து, மெஷின் ஆப்ரேட்டர் பிளாஸ்டிக் புராசசிங் பயிற்சி வழங்குகிறது.ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினத்தைசேர்ந்த, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.சென்னையில் 4 மாதங்கள் நடக்கும் இப்பயிற்சியின் போது, மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சியை முடிப்பவர்களுக்கு, மாதம் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும்.விருப்பமுள்ளவர்கள் தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.