உள்ளூர் செய்திகள்

பொதுத்தேர்வுக்கு தயார்ப்படுத்தும் ஆசிரியர்களுக்கு விலக்கு தேவை

திருப்பூர்: தமிழ்நாடு விடியல் ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் சுந்தரமூர்த்தி, தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள மனு:பொதுத்தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு ஆசிரியர்கள், 55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள், நோயுற்றோர் மற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் ஆசிரியர்கள் ஆகிய மூன்று பிரிவினருக்கு மக்கள்தொகை கணக்கெடுப்புப் பயிற்சி மற்றும் பணியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும்.இவர்கள் தங்களின் உடல், மனநிலையைக் கருத்தில் கொண்டும், பொதுத்தேர்வை எதிர்நோக்கியிருக்கும் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பணிகளில் முழு கவனம் செலுத்த வேண்டியதும் அவசியமாகிறது. எனவே, இத்தகைய ஆசிரியர்களுக்கு இப்பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்