உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் ஜூடோ பயிற்சி துவக்கம்

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், நான்காம் ஆண்டாக தற்காப்பு கலை ஜூடோ பயிற்சி துவங்கியது.தமிழக அரசு மாணவர்களின் கல்வி நலன் மட்டுமின்றி, திறன்களை வளர்க்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண் குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில், தற்காப்பு கலை பயிற்சியான கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ, சிலம்பம் ஆகியவற்றை நடத்த உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவியர் எந்த ஒரு சூழ்நிலையையும் பக்குவமாக எதிர்கொள்ளும் ஆற்றல், மாணவியர் அன்றாடம் பயன்படுத்தும் ஆடை மற்றும் கீ செயின், துப்பட்டா, பேனா, பென்சில் ஆகிய கருவிகளை கொண்டு, ஆபத்து காலங்களில் தங்களை தற்காத்துக் கொள்ளும் பயிற்சிகளை அளிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி 5, 6, 7, 8 ஆகிய வகுப்பு மாணவியருக்கு ஜூடோ பயிற்சியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) தமிழ்ச்செல்வி தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் சாகுல் அமீது தற்காப்பு கலையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.ஜூடோ பெண் பயிற்றுனர் தனிகா பயிற்சி அளித்தார். மேற்பார்வையாளர்களாக ஆசிரியர்கள் ஷகிலாபானு, காயத்ரி, தஸ்லீம் பணியாற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்