உள்ளூர் செய்திகள்

ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் கீதா வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு வேளாண் பல்கலையில் இயங்கும் திறந்தவெளி மற்றும் தொலைதுாரக் கல்வி இயக்கத்தின் வழியாக, ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு, கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் தோட்டக்கலைக் கல்லுாரி மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் செப்டம்பர் முதல் வாரத்தில் துவங்க உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம்.தமிழ் வழிக்கல்வியில் இப்பாடங்களுக்கு நேர்முக பயிற்சி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும். கல்விக் கட்டணம், 25,000 ரூபாய் மற்றும் விண்ணப்பக் கட்டணம், 100 ரூபாய் ஆகும்.இந்த பட்டயப்படிப்பு படிப்பதன் மூலம் உரக்கடை, பூச்சிமருந்துக்கடை, விதைக்கடை மற்றும் தாவர மருத்துவ மையம் வைக்கலாம். இடுபொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்களாகலாம். மேலும் தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், மண்டல ஆராய்ச்சி நிலையம், பையூர், கிருஷ்ணகிரி மாவட்டம், உதவி பேராசிரியர்கள் கோவிந்தன், 99422 79190, 73390 02390, உதவியாளர் சுரேகா, 95007 71299 மற்றும் இயக்குனர், திறந்தவெளி மற்றும் தொலைதுாரக் கல்வி இயக்கம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை - 641 003, ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் லட்சுமி, 0422 - 6611229 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்