பள்ளி மாணவர்களுக்கு கணித திறனறி தேர்வு
கோவை: தமிழ்நாடு, அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், பள்ளி மாணவர்கள் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் திறனறி தேர்வு ஆண்டுதோறும் நடக்கிறது. இந்தாண்டுக்கான கணித திறனறி தேர்வு, நேற்று மாநிலம் முழுக்க நடந்தது.கோவையில் 20 மையங்களில், 4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வு எழுதினர். 6 - 9ம் வகுப்பு வரையிலான அனைத்து வகை பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர்.வரும் 11ம் தேதி அறிவியல் திறனறி தேர்வு நடக்கிறது. வெற்றி பெறுவோருக்கு, ரொக்கப்பரிசுடன் சான்றிதழும், பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்படும் என, செயல் இயக்குனர் சண்முக சுந்தரம் தெரிவித்தார்.