கள்ளக்குறிச்சியில் நாளை வேலை வாய்ப்பு முகாம்
கள்ளக்குறிச்சி: கலெக்டர் பத்மஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை (20ம் தேதி) நடக்கிறது.கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கும் இவ்வேலை வாய்ப்பு முகாமில் தமிழகத்தை சேர்ந்த வங்கி, நிதி, தனியார், காப்பீடு மற்றும் சில்லரை விற்பனை துறைகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன.முகாமில் 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ., பி.டெக்., முடித்த ஆண், பெண் ஆகியோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணைய தளத்தில் லாகின் செய்து பதிவு செய்ய வேண்டும். இதன்மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது.மேலும் இவ்வேலை வாய்ப்பு முகாமில் உளுந்துார்பேட்டையில் அமைய உள்ள பன்னாட்டு காலனி நிறுவனம் பவு - சென் கலந்து கொண்டு ஐ.டி.ஐ, டிப்ளமோ கல்வி தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளன. எனவே தகுதியும், விருப்பமும் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், தனியார் துறை நிறுவனங்கள் நாளை (20ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரை ஸ்ரீஉதயம் டவர்ஸ், வீரசோழபுரம் (மேற்கு), மாடூர் டோல் பிளாசா அருகில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கும் முகாமில் கலந்துகொண்டு பயன் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.