உள்ளூர் செய்திகள்

அரசு கல்லுாரியில் தொல்லியல் விழிப்புணர்வு சொற்பொழிவு

செஞ்சி: உலக மரபு வார விழாவை முன்னிட்டு, தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில், செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு தொல்லியல் விழிப்புணர்வு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.இதில், 'கல்வெட்டு ஓர் அறிமுகம்' மற்றும் 'ஆதிச்சநல்லுார் அகழாய்வு' ஆகிய தலைப்புகளில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.பேராசிரியர் சுதாகர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். தமிழக அரசு தொல்லியல் துறை விழுப்புரம் மாவட்ட உதவி இயக்குநர் லோகநாதன், கல்வெட்டுகள், அவற்றின் வரலாற்று சிறப்பு குறித்து விளக்கினார்.தொல்லியல் துறை மாவட்ட அலுவலர் பரத்குமார், ஆதிச்சநல்லுார் அகழாய்வு மற்றும் அதன் தொல்லியல் முக்கியத்துவம் குறித்து பேசினார். மாணவ, மாணவிகளுக்கு தொல்லியல் விழிப்புணர்வு காணொளி நிகழ்ச்சி காண்பிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் தமிழ் மற்றும் வரலாற்றுத்துறை மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்