உள்ளூர் செய்திகள்

டெல்லி தனியார் பள்ளிகளுக்கு புதிய விதிமுறை

டெல்லி தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளில், வெளிப்படையான தன்மையை கொண்டுவர பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்து தனியார் பள்ளிகளும், நலிந்த பிரிவு மாணவர்களுக்காக பள்ளியில் தற்போது ஒதுக்கப்பட்டிருக்கும் இட எண்ணிக்கை விவரங்களை, காட்சி பலகை மூலமாக பார்வைக்கு வைப்பதை டெல்லி அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என்று மத்திய இன்பர்மேஷன் கமிஷன் வழிகாட்டியுள்ளது. அந்த காட்சி பலகையானது ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இருப்பதோடு, 6 முக்கிய விவரங்களையும் கொண்டிருக்க வேண்டும் என்று மத்திய இன்பர்மேஷன் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அவை, பள்ளியில் அனைத்து வகுப்புகளிலும் உள்ள மொத்த இடங்கள், அனைத்து வகுப்புகளிலும் உள்ள மொத்த காலி இடங்கள், நலிந்த பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த இடங்கள், அந்த ஒதுக்கீட்டின்கீழ் தற்போது காலியாக இருக்கும் இடங்கள், ஒதுக்கீட்டின் அடிப்படையில் பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் மற்றும் எப்போது அந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டன, எப்போது சேர்க்கை வழங்கப்படும் போன்றவை. மேலும் இந்த காட்சி பலகைகள் ஒவ்வொரு வாரமும் புதுப்பிக்கப்படுகிறதா மற்றும் இந்த விவரங்கள் கல்வி இயக்குனரகத்தின் வலைதளத்தில் இந்தாண்டு டிசம்பர் 31 க்கு முன்பாக ஏற்றப்பட்டுள்ளதா என்பதையும் அந்த அமைப்பின் இயக்குனர் உறுதிசெய்ய வேண்டும். மேலும், கல்வி இயக்குனரகத்தின் வலைதளத்தில், தனியார் மற்றும் அரசு உதவி பெறாத பள்ளிகள் செலுத்திய வருடாந்திர வருமான வரி விவரங்கள் அந்தந்த பள்ளிகளின் விவரங்களோடு ஏற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும் இன்பர்மேஷன் கமிஷன் வழிகாட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்