உள்ளூர் செய்திகள்

மாணவர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான இக்னோ திட்டம்

சமூகத்தில் பின்தங்கிய பகுதியினருக்கு பலவிதமான படிப்புகளை கொண்டு சேர்க்கும் விதமாக, திறன் மேம்பாடு மற்றும் உள்ளார்ந்த திட்டம் என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை இக்னோ தயாரித்துள்ளது. சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களுக்கு இக்னோவில் என்னென்ன படிப்புகள் உள்ளன என்று தெரிவதில்லை. ஒரு வருட படிப்பிற்கு வெறும் ரூ.1700 என்ற அளவில் குறைவான தொகையில் இக்னோவில் வாய்ப்புகள் இருந்தாலும்கூட அதைப்பற்றி இந்த மக்களுக்கு தெரிவதில்லை. எனவே இதைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். மேலும் இது சம்பந்தமாக என்.ஜி.ஓ -களுடனும் இணைந்து செயல்பட திட்டமிடப்பட்டு வருகிறது. மேலும் இக்னோ வழங்கும் படிப்பு விவரங்களை பற்றி மாணவர் சமூகத்திற்கு தெரிவிக்க, மாதாந்திர திறந்தவெளி அமர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது. மேலும் இக்னோவில் பலவித படிப்புகளுக்கான முடிவுகள் தாமதமாக வெளிவருவது ஒரு பிரச்சினையாக இருந்தது. ஆனால் இந்த வருடம் சுமார் 3 லட்சம் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை 45 நாட்களில் அறிவித்து இக்னோ சாதனை படைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்