அறிவியல் வல்லரசாக இந்தியா: விஞ்ஞானி ஆதங்கம்
நாட்டிற்கு அதிகளவிலான ஆராய்ச்சி மாணவர்கள் தேவைப்படுகிறார்கள் என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் கூறினார். சென்னை பல்கலைக்கழகத்தின் 153 வது பட்டமளிப்பு விழா நடந்தது. அதில் கலந்துகொண்ட எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி பவுண்டேஷனின் தலைவர் எம்.எஸ். சுவாமிநாதன், அதிகளவிலான ஆராய்ச்சி மாணவர்கள் இந்த நாட்டிற்கு தேவைப்படுகிறார்கள் என்றார். அறிவியல் துறையில் உலகளவில் இந்தியா தலைமை தாங்க வேண்டுமெனில் சிறந்த மனிதவளம் நமக்கு வேண்டும். ஆனால் இவ்வளவு பெரிய மக்கள்தொகை உள்ள நாட்டில் வருடத்திற்கு சுமார் 700 பிஎச்.டி. பட்டதாரிகள் மட்டுமே உருவாகிறார்கள் என்று கவலை தெரிவித்தார்.