உள்ளூர் செய்திகள்

எல்லோருக்கும் பொதுவான அறிவியல், கணிதப் பாடம்

இந்தியா முழுவதும் அனைத்து மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான அறிவியல், கணிதப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தியாவில் மேல்நிலைப் பள்ளிகளில் நடத்தப்படும் பாடப் பிரிவுகள் அரசு பள்ளி, மெட்ரிக் என மொத்தம் 32 வகையாக உள்ளன. அதில் தற்போது 19 பாடப் பிரிவுகளில் மட்டும் புதிய பாடப்புத்தகத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவை அனைத்திலும் வரும் கல்வி ஆண்டு முதல் ஒரே மாதிரியான அறிவியல், கணிதப் பாடங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையமும் பள்ளி கல்வி மையமும் சேர்ந்து தயாரித்துள்ளது. வரும் கல்வி ஆண்டில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒரே மாதிரியான இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும். இந்த பாடங்களைப் படிக்கும் மாணவர்கள் 2013ஆம் ஆண்டில் பொதுத் தேர்வை எழுதுவார்கள். சி.பி.எஸ்.இ. நிர்வாகம், தனது அனைத்து பள்ளிகளுக்கும், புதிய பாடப் புத்தகம் பற்றிய தகவல்களை அனுப்பிவிட்டது. மேலும், புதிய பாடங்களை தனது இணையதளத்தில் வெளியிட்டு, புத்தகங்கள் அச்சடிக்கும் பணியிலும் இறங்கியுள்ளது. மற்ற பள்ளிகளும், புதிய பாட முறை மாற்றத்தை மாணவர்களுக்கு அறிவித்துள்ளது பிளஸ் 2 படித்து முடித்து பல்வேறு உயர் கல்விகளில் சேர நினைக்கும் மாணவர்களுக்கு இந்த புதிய பாட முறை மிகுந்த பயனளிக்கும் என்று புதிய பாட முறையை வடிவமைத்த மைய உறுப்பினர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்