ஆங்கில தேர்வு மிகவும் ஈஸி: 10ம் வகுப்பு மாணவர்கள் கருத்து
உடுமலை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நேற்று ஆங்கில தேர்வு நடந்தது. இத்தேர்வு குறித்த மாணவ, மாணவியரின் கருத்துகள்:சதுர்த்யா, ராஜலட்சுமி கெங்குசாமி மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி, பெதப்பம்பட்டி: ஆங்கில தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டும் யோசித்து எழுதும்படி இருந்தது. இரண்டு மதிப்பெண் வினாக்கள் மற்றும் இலக்கணம் பகுதியில், எளிமையாக இருந்தது. அனைத்து கேள்விகளும் மிகவும் எளிமையாக இருந்தது.தர்ஷன், ஆக்ஸ்போர்டு மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி, கொங்கல்நகரம்: மீண்டும், மீண்டும் கேட்கப்பட்ட கேள்விகள் வந்ததால், எந்த சந்தேகமும் இல்லாமல் அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுத முடிந்தது. பெரும்பாலான கேள்விகள் புத்தக பயிற்சி பகுதியில் கேட்கப்பட்டிருந்ததால், எந்த சிரமமும் இல்லாமல் அனைத்து கேள்விகளுக்கும் எளிதாக பதில் எழுத முடிந்தது.நயனதீட்சா, ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, உடுமலை: அனைத்து கேள்விகளும் எளிதாக இருந்தன. திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களே தேர்விலும் கேட்கப்பட்டதால், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே தேர்வை முடித்துவிட்டோம். இலக்கண பகுதியில் மட்டும் யோசித்து விடையளிக்கும் வகையில், வினாக்கள் இருந்தன. இத்தேர்வில், நுாறு மதிப்பெண் பெற வாய்ப்புகள் அதிகம்.ஸ்ரீஹரிஷ், ஜி.வி.ஜி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, உடுமலை: இத்தேர்வு எங்களுக்கு மிகவும் எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தது. புத்தகத்தில் உள்ள அனைத்து வினாக்களையும் திரும்பத் திரும்ப பயிற்சி செய்ததால் தேர்வு எழுத எளிமையாக இருந்தது. தன்னம்பிக்கையோடு எழுதியுள்ளேன். முழு மதிப்பெண் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.