உள்ளூர் செய்திகள்

இலங்கை தமிழருக்கு ஆசிரியர் கூட்டணி ரூ.1.25 கோடி நிதி

சென்னை: இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்காக, தமிழக ஆசிரியர் கூட்டணி, ஒரு கோடியே 25 லட்சம் ரூபாயை வழங்குவதாக அறிவித்துள்ளது. சங்கத்தின் பொதுச் செயலர் வின்சென்ட் பால்ராஜ் கூறியிருப்பதாவது:தமிழக ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தங்களின் ஒரு நாள் சம்பளமாக இந்த நிதி உதவியை வழங்குகின்றனர். இந்த தொகையை, இம்மாத சம்பளத்தில் பிடித்தம் செய்துக் கொள்வதற்கான ஒப்புதல் கடிதத்தை, தொடக்கக் கல்வி இயக்குனர் மற்றும் பள்ளிக் கல்வித்துறைச் செயலரிடமும் வழங்கியுள்ளோம். இவ்வாறு பால்ராஜ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்