உள்ளூர் செய்திகள்

பர்கூர் அரசு மகளிர் கல்லூரியில் ஆக.,13ல் கலந்தாய்வு

பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை பாடபிரிவுகளுக்கான முதலாமாண்டு மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும், 13ம் தேதி நடக்கிறது. கல்லூரி முதல்வர் ரஹீமா வெளியிட்ட அறிக்கை: பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2013 - 14ம் ஆண்டுக்கான முதுநிலை பாடப்பிரிவுகளான எம்.எஸ்.ஸி., கம்ப்யூட்டர் சயின்ஸ், ஊட்டச்சத்து உணவு கட்டுப்பாட்டியியல், எம்.காம்., வணிகவியல் ஆகிய துறைகளில் முதலாமாண்டு மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும், 13ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. இந்த பாடப்பிரிவுகளில் சேர விண்ணபித்துள்ள மாணவிகள் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். மேலும், பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், மின்னணுவியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டியல் மற்றும் பி.சி.ஏ., கம்ப்யூட்டர் பயன்பாட்டியல் போன்ற இளம் அறிவியல் பாடங்களுக்கும், பி.காம்., பி.காம்., கூட்டாண்மை செயலரியல் போன்ற வணிகவியல் துறைகளில் உள்ள காலியிடங்களுக்கு மாணவியர் சேர்க்கைக்கான கடைசி கட்ட கலந்தாய்வு வரும், 7ம் தேதி காலை, 10 மணிக்கு நடக்கிறது. தகுதியான மாணவியர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டு கல்லூரியில் சேரலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்