உள்ளூர் செய்திகள்

நெல்லை பல்கலை., பிஎட்.,: ஜனவரி 18ல் நேர்முகத்தேர்வு?

வரும் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் இருந்து வகுப்புகள் துவங்குகின்றன.நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.,யில் தொலைநெறி தொடர் கல்வி இயக்ககம் சார்பில் கடந்த ஆண்டு பிஎட்., படிப்பு துவக்கப்பட்டது. தனியார் கல்வி நிறுவனங்களில் பிஎட்., படிக்க அதிக செலவாகும் என்பதால், நெல்லை பல்கலை.,யில் பிஎட்., படிக்க ஏராளமானோர் விண்ணப்பித்தனர். பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியராக குறைந்தது இரண்டு ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுள்ள இந்த படிப்பில் சேர, சுமார் 5 ஆயிரத்து 50 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் நெல்லை பல்கலை., பிட்., படிப்பு எப்போது துவங்கும் என விண்ணப்பித்தவர்கள் ஆவலாக உள்ளனர். பிஎட்., படிப்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே சேர்க்கை வழங்க பல்கலை., முடிவு செய்துள்ளது. இதனால் இந்த ஆண்டு நேர்முகத்தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். பிஎட்., படிப்பிற்கான நேர்முகத்தேர்வு பொங்கல் விடுமுறைக்கு பின் நடக்கும் என தெரிகிறது. பொங்கல் விடுமுறைக்கு பின் வரும் ஜனவரி 18ம் தேதி பல்கலை., திறக்கப்படுகிறது. 18ம் தேதி பிஎட்., படிப்பிற்கான நேர்முகத்தேர்வு நடக்கும் என தெரிகிறது. பொங்கல் விடுமுறைக்கு முன் நேர்முகத்தேர்வு குறித்த தகவல்களை தெரிவிக்கவும் பல்கலை., தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆசிரியர்களாக பணியாற்றி ஐந்தாண்டுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். அதிக ஆண்டு அனுபவம் உள்ளவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை கொடுக்கப்படும் என தெரிகிறது.இந்த பிஎட்., படிப்பிற்கான வகுப்புகள் வரும் பிப்ரவரி மாதம் துவங்கும் என பல்கலை., வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்