உள்ளூர் செய்திகள்

ராணுவ கல்லுாரியில் மாணவர் சேர்க்கை டிச.2 எழுத்து தேர்வு

இந்த ராணுவ கல்லுாரியில் 2024 ஜூலையில் மாணவர் சேர்க்கைக்கான தேர்வு 2023 டிச., 2 சென்னையில் நடக்க உள்ளது. எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்படும். எழுத்து தேர்வில் ஆங்கிலம், கணக்கு மற்றும் பொது அறிவு வினாக்களுக்கு விடை அளிக்க வேண்டும்.ஒவ்வொரு பாடத்திலும்தேர்வு பெற நேர்முக தேர்வு உட்பட குறைந்த பட்ச மதிப்பெண் 50 சதவீதம். இத்தேர்வுக்கான விண்ணப்பத்தை பொது பிரிவினர் ரூ.600 மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் ஜாதிசான்றுடன் ரூ.555ஐ www.rimc.gov.in ஆன்லைன் மூலம் அல்லது The Commandant, Rashtriya Indian Military College, Garhi Cantt., Dehradun, Uttrakhand - 248 003 என்ற முகவரிக்கு டி.டி., மூலம் அனுப்பி பெறலாம்.டி.டி.,யை THE COMMANDANT, RIMC FUND, DRAWEE BRANCH, HDFC BANK, BALLUPUR CHOWK, DEHRADUN (BANK CODE- 1399) UTTARKHANDல் செல்லத்தக்க வகையில் அனுப்ப வேண்டும். இருபாலர் விண்ணப்பிக்கலாம். பெற்றோர் தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.விண்ணப்பதாரர் 2024 ஜூலை 1 அன்று 11.5 வயது நிரம்பியும், 13 வயது அடையாதவராக இருத்தல் வேண்டும். அவர் 2021 ஜூலை 2 க்கு முன்னும், 2013 ஜன.,1க்கு பின்னும் பிறந்திருக்க கூடாது. வயது வரம்பில் தளர்வு இல்லை. ராணுவ கல்லுாரியில் சேரும் போது 2024 ஜூலை 1 ல் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7ம் வகுப்பு படிப்பவர் அல்லது தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.பூர்த்தி செய்த விண்ணப்பத்தை (இரண்டு நகல்) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், பூங்கா நகர், சென்னை-600 003 என்ற முகவரிக்கு அக்., 15 மாலை 5:45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.கூடுதல் விபரங்களை www.rimc.gov.in- இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்