உள்ளூர் செய்திகள்

விடைத்தாளை எடுத்துச் சென்ற பிளஸ் 2 மாணவர்!

சிவகங்கை: சிவகங்கையில் பிளஸ் 2 மாணவர் ஒருவர் தேர்வு அறையில் இருந்து விடைத்தாளை வெளியில் எடுத்துச் சென்றதாக புகார் எழுந்தது.பிளஸ் 2 கணிதத் தேர்வு நேற்று நடந்தது. சிவகங்கை தனியார் பள்ளி தேர்வு மையத்தில் தனித்தேர்வு எழுதிய மாணவர் தேர்வு முடிந்ததும் விடைத்தாளை அறையில் இருந்து வெளியே எடுத்துச் சென்றார். அவரை கண்காணிப்பாளர் விரட்டி பிடித்து விடைத்தாளை வாங்கியதாக புகார் எழுந்தது.முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சண்முகநாதன் கூறுகையில், விடைத்தாளை யாரும் எடுத்துச் செல்லவில்லை. பறக்கும் படை ஆய்வின்போது தேர்வில் பிட் வைத்திருந்த தனித்தேர்வு மாணவர் பிடிபட்டார். அவரது விடைத்தாளை தனியாக அனுப்பி வைத்துள்ளோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்