உள்ளூர் செய்திகள்

சர்வதேச சிறந்த பல்கலை பட்டியல்: 200க்குள் 2 இந்திய கல்வி நிறுவனங்கள்

முதல் பத்து இடங்களிலும் அமெரிக்கா (6), பிரிட்டன் (4) பல்கலைக்கழங்களே இடம்பிடித்துள்ளன. அமெரிக்காவின் ஹார்வர்டு, யேல் பல்கலைக்கழகங்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்கள் தலா ஒரு இடம் பின்தங்கி 3ம், 4ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. முதல் 50 கல்வி நிறுவனங்களில் சீனாவின் 3 பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ள நிலையில், முதல் 100 இடங்களுக்குள் கூட ஒரு இந்திய பல்கலைக்கழகம் கூட இடம்பெறவில்லை. எனினும், கடந்த ஆண்டு 307 மற்றும் 269 இடங்களில் இருந்த டில்லி ஐ.ஐ.டி., மும்பை ஐ.ஐ.டி., ஆகியவை இந்த ஆண்டு பட்டியலில் முறையே 154வது மற்றும் 174வது இடத்தை எட்டியுள்ளன. உலகின் சிறந்த பத்து பல்கலைக்கழகங்களின் பட்டியல்: ஹார்வர்டு பல்கலைக்கழகம் (அமெரிக்கா) யேல் பல்கலைக்கழகம் (அமெரிக்கா) கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (பிரிட்டன்) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் (பிரிட்டன்) கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (அமெரிக்கா) இம்பெரியல் கல்லூரி (பிரிட்டன்) லண்டன் பல்கலைக்கழக கல்லூரி (பிரிட்டன்) சிகாகோ பல்கலைக்கழகம் (அமெரிக்கா) மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (அமெரிக்கா) கொலம்பியா பல்கலைக்கழகம் (அமெரிக்கா) ‘டைம்ஸ் ஹையர் எஜுகேஷன்‘ சிறப்பு இதழில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்