எம்.ஓ.பி மகளிர் கல்லூரியில் ஏரோபிக்ஸ் 25
சென்னை: சென்னையிலுள்ள எம்.ஓ.பி வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் ஏரோபிக்ஸ் 25 என துறைகளுக்கிடையேயான போட்டி நடந்தது.மகளிர் தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்திய விளையாட்டு ஆணையத்துடன் இணைந்து இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. சர்வதேச கூடைப்பந்து வீராங்கனை ஐஸ்வர்யா நடராஜ் இந்த நிகழ்வின் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்திய விளையாட்டு ஆணையத்தின் துணை இயக்குநர் ஸ்வேதா விஸ்வதன் இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டார். இப்போட்டியில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டன. அதில் பி.காம் அணி மாணவிகள் முதல் பரிசு வென்றனர், பி.பி.ஏ அணி மாணவிகள் இரண்டாம் இடம் பிடித்தனர்.