பள்ளி கல்வித்துறை பணி நியமனம்; ஜன.28 ல் கலந்தாய்வு
ராமநாதபுரம்: தமிழக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 ஆகிய பணியிடங்களில் நியமனம் செய்வற்கு ஜன., 28ல் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.2025ல் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4ல் தேர்ச்சி பெற்றுள்ள 132 இளநிலை உதவியாளர்கள், 14 தட்டச்சர்கள், 12 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 என 168 பேர் பள்ளிக் கல்வித்துறை காலி பணியிடங்களில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஜன., 28ல் காலை 11:00 மணிக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.மாவட்ட வாரியான பட்டியல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வானவர்கள் ஜன., 28 காலை 10:00 மணிக்கு உரிய ஆவணங்களுடன் கலந்தாய்வில் பங்கேற்க வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.