உள்ளூர் செய்திகள்

உலகின் பெரிய பொருளாதார நாடுகள்: 3வது இடத்தை இழந்தது ஜப்பான்!

புதுடில்லி: உலகின் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த ஜப்பான் 4வது இடத்திற்கு சரிவைச் சந்திந்துள்ளது. இந்தியா 5 இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.உலக பொருளாதாரத்தில் தற்போது அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், ஜப்பான் மூன்றாவது இடத்திலும் இருந்தன. இந்நிலையில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக தற்போது ஜப்பான் 3வது இடத்திலிருந்து சரிந்து 4வது இடத்திற்கு சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனி 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்தியா ஐந்தாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.பொருளாதார மந்தநிலைஇது குறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளில் ஜப்பானின் பொருளாதாரம் சரிந்துள்ளது. 2023ல், ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 591.48 டிரில்லியன் (4.2 டிரில்லியன் டாலர்) ஆக உள்ளது. ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3 சதவீதமாக ஆக வளர்ச்சி கண்டுள்ளது. இது 4.12 டிரில்லியன் யூரோக்கள் (4.46 டிரில்லியன் டாலர்) ஆக உள்ளது.ஜப்பானில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக உணவு, எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்து, அவற்றின் நுகர்வு 0.2 சதவீதமாக குறைந்துள்ளது. ஜப்பானின் எரிபொருள் தேவையில் 94 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதிக்கான செலவு கூடி இருப்பதன் காரணமாக பொருளாதாரத்தில் மந்தநிலை நிலவுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்