கல்லுாரி முதலாம் ஆண்டு வகுப்புகள் 3ல் துவக்கம்
தமிழகத்தில் உள்ள 163 அரசு கலைக் கல்லுாரிகளில் 1.07 லட்சம் மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. இதுவரை 75,811 மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்க்கப்பட்டு உள்ளனர். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது மாணவர் சேர்க்கை தொடர்கிறது. இம்மாதம் 30ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3 முதல் வகுப்புகள் துவக்கப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.