உள்ளூர் செய்திகள்

மாவட்ட ஹாக்கி போட்டி: வரும் 30ம் தேதி துவக்கம்

ஈரோடு: மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி வரும் 30ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஈரோடு மாவட்ட பிரிவு சார்பில் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் போட்டி வரும் 30ம் தேதி காலை ஏழு மணிக்கு பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் நடக்கிறது. இதில் முதலிடம் பெறும் அணி, மண்டல அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்கலாம். போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அணிகள், ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் பதிவு செய்ய வேண்டும். போட்டியில் பங்கேற்க வயது வரம்பு இல்லை. இம்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். கல்லூரி, பள்ளி மாணவர்கள், தங்கள் பள்ளி, கல்லூரி முதல்வர், தலைமை ஆசிரியரிடம் இருந்து கடிதம் பெற்று வர வேண்டும். இதில் முதலிடம் பெறும் அணி மட்டுமே மண்டல அளவிலான போட்டிக்கு அழைத்து செல்லப்படும். விளையாட்டு வீரர்களுக்கு பயணப்படி மற்றும் தினப்படி வழங்கப்படமாட்டாது. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்படும். எனவே வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மாவட்ட விளையாட்டு அலுவலர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்