விடுபட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு டிச. 30, 31ல் சான்றிதழ் சரிபார்ப்பு
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், இன்னும் 1,000த்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.ஏற்கனவே நடந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளில் விடுபட்ட பட்டதாரி ஆசிரியர் பதிவுதாரர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, தகுதியானவர்களை தேர்வு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, 2,000த்திற்கும் மேற்பட்ட பதிவுதாரர்களுக்கு, வரும் 30, 31ம் தேதிகளில் சென்னையில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற உள்ளன.சென்னை அசோக்நகர், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய மூன்று மையங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற உள்ளன. தகுதியான பதிவுதாரர்களுக்கு, ஏற்கனவே அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.